உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அதிகாலையில் கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; ஒருவர் பலி, பலர் படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தொன்று, வெலிஹார பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பேருந்து, மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த போது, முன்னால் சென்ற டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகாலை 2.45 மணியளவில்,கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதி, வெலிஹார பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
12 பேருந்துப் பயணிகள் , டிப்பர் லொறியின் ஓட்டுநர் அனைவரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவருக்கு சிகிச்சை பலனளிக்காமல், அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது உடல், தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதே போன்று, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இலங்கையில் பல பேருந்து விபத்துகள் பதிவாகி வருகின்றன. இது போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதீத கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.