உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அரச சேவையாளர்களினது வேதனம் 20,000 ரூபாவால் உயர்த்தப்பட வேண்டும்

தற்போதைய வாழ்க்கை செலவிற்கு ஏற்ப சகல அரச சேவையாளர்களினதும் வேதனம் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையாளர் சங்கம் கோரியுள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியாராச்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்படி தற்போதைய வேதன அதிகரிப்பானது 20,000 ரூபாவால் உயர்த்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வேதன அதிகரிப்பு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.