உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய விமானம்!

இலங்கை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இந்தோனேசியாவின் ‘கருடா’ விமான சேவையின் விமானம் வருகை தந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்திற்கு பெற்றோல் நிரப்பவும், பணியாளர்களின் ஓய்விற்காகவுமே வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவிற்கு முன்னர் சுமார் 45 விமான சேவை நிறுவனங்கள் தரித்து செல்வதற்காக இலங்கைக்கு வருகை தரும். அது பின்னர் 17க்கும் குறைவாக மாறியிருந்தது.
அந்த நிலை தற்போது மாறி வருகிறது. தற்போது 30க்கும் அதிகமான விமான நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.