உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் பயங்கர விபத்து… பல வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தின் பிரேக் பழுதானதால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பேருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.