உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
போதைக்கு அடிமையான தம்பதி செய்த மோசமான செயல்!

கைக்குண்டைக் காட்டி பல வீடுகளில் கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் படல்கமவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் இரவு வேளைகளில் கைக்குண்டை காட்டி மக்களை அச்சுறுத்தி பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரும் அவரது மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை விற்று அந்தப் பணத்தில் போதைப்பொருள் கொள்வனவு செய்துவந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.