உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் மீட்கப்பட்ட 5 கண்ணிவெடிகள்

யாழ்ப்பாணம், வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.