உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட மற்றுமொரு காணொளி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் புதிய காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், அவர் வெளியிட்ட காணொளி, யாழ்ப்பாணம் வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
முன்னதாக வைத்தியர் இந்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அவர் இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மற்றுமொரு காணொளி வெளியிட்டு மேலதிக தகவல்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.