உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

வெளிநாட்டுக்கு போலியான விசா மூலம் செல்ல முயன்ற ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11-05-2023) இடம்பெற்றுள்ளது.
யாழ் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.