உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வீதி விபத்துக்களினால் நெருக்கடியில் அரசாங்கம்

வீதி விபத்துக்களினால் நோய்வாய்ப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களால் ஆண்டுக்கு 3000 பேர் உயிரிழப்பதாகவும்,நாளொன்றுக்கு குறைந்தது 10 பேர் வரை உயிரிழப்பதாகவும், பலர் விபத்துக்களில் சிக்கி ஊனமுற்றவர்களாக மாறுவதாகவும் வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகளின் படி. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 பேர் நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
இதன் காரணமாக நோய்வாய்ப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவளிப்பதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.