உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை மின்சார சபை விற்பனை தொடர்பில் வலுசக்தி அமைச்சின் தீர்மானம்

இலங்கை மின்சார சபையையோ அதன் நிறுவனங்களையோ விற்பனை செய்வதற்கு எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மூலம், மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றில் மாத்திரமே மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்