உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சமந்தா இடத்தை பிடித்த 23 வயது நடிகை.. புஷ்பா 2 புகைப்படத்தை வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர்.
சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருப்பார். இவருடைய நடனம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சமந்தா நடனமாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இப்படத்தில் இல்லை என தகவல் வெளிவந்தது.
அவருக்கு பதிலாக வேறு யார் நடனமாட போகிறார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா தான் சமந்தாவின் இடத்தை பிடித்துள்ளார் என நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.