உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்றுகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி …8 பேரின் நிலை!
எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பேரூந்து பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதோடு விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.