ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திருமதி நாகராசா சிவஞானேஸ்வரி
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சிவஞானேஸ்வரி அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விஜாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தளையசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான திருலோகவதி, இராஜேஸ்வரன் மற்றும் சாந்தசிவரூபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாராணி, செல்வரத்தினம் மற்றும் சாந்தகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நகுலேஸ்வரி(பிரான்ஸ்),விக்னேஷ்வரி(விஜதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டிசம்பரநாதன்(பிரான்ஸ்), ரவிகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தட்சினி(பிரான்ஸ்), டானியல்(பிரான்ஸ்), ஸ்ரிபனி(பிரான்ஸ்), வாகினி(லண்டன்), டாவிட்(லண்டன்), குருராம்(பிரான்ஸ்), ஜொனாத்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரணிதா(லண்டன்), கவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியூம் ஆவார்.