உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் கைது
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி கடற்றொழிலுக்குச் சென்ற 22 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.இரண்டு படகுகளில் இவர்கள் கடந்த 21ஆம் மற்றும் 23ஆம் திகதியும் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இந்த 2 விசைப்படகுகளும் நேற்று பிற்பகல் இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது சீரற்ற வானிலை, கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது.
எனினும், அங்கு கண்காணிப்பு பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப் படகுகளுடன் 22 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.