போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துரதிர்ஷ்டவசமாக குருணாகலில் உயிரிழந்த இளைஞன்!
குருணாகல் பகுதியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டதால், அங்கிருந்த ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டி நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்திற்கு இரும்புக் குழாய் ஒன்றை எடுத்துச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்த கட்டிடத்தில் பயிற்சி வகுப்பில் பணியாற்றிய 28 வயதான விமுக்தி தில்ஷான் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.