போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கல்முனை தடை உத்தரவு மேலும் நீடிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த, அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ. எல். எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதி ஏ. ஆர். எம். அசீம் என்பவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேலும் குறித்த மனுவை மார்ச் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.