போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
டீசல் விலை குறைத்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது!
![டீசல் விலை குறைத்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது!](https://itamilnews.com/wp-content/uploads/2024/06/19.jpg)
நாட்டில் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், டீசல் விலை 307 ரூபாவாக குறைந்ததால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும்.
டீசல் விலை 4 சதவீதம் குறைந்தால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும். ஆனால் இம்முறை டீசல் விலை 2.8 சதவீதமாகவே குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் டீசலின் விலை லிட்டருக்கு 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 317 ரூபாவாக குறைந்துள்ளது.
இந்நிலையி ல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென அவர் தெரிவித்தார்.