போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கலாம் ; வெளியான இரகசிய சதித்திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, பொதுஜன பெரமுனவுக்கு எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.
இந்த குழு பல நாட்களாக கூடி இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு மூட்டை உரம் 50,000 ரூபாவாகவும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.