ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து யாழில் பட்டாஸ் வெடித்துக் கொண்டாடிய ஆதரவாளர்கள்!
நேற்றைய தினம் நாட்டின் 08வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து யாழில் அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கியதேசிய கட்சியின் தலைவரோன ரணில் விக்ரமசிங்கவே இவ்வாறு ஜனாதிபதியாக பொறுப்பேற்றப்பின்னரே அக்கட்சியின் ஆதரவாளர்கள் யாழ் நகரின் மத்திய பேருந்து நிலையத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.
மேலும் கொழும்பு பகுதிகளிலும் இவ்வாறு பொதுமக்கள் வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.