போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாமல் ராஜபக்ஷ இராஜினாமா!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்துக்கு இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்துக்கு ஜே.சி அலவத்துவல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.