நால்வரின் பெயர்கள் பரிந்துரை: அடுத்த பிரதமர் யார்?
தற்போது நாட்டின் பிரதமராய் இருந்து பிறகு பதில் ஜனாதிபதியாய் இருந்து இன்றை தினம் ஜனாதிபதியாக ரணில் விக்ரம சிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாட்டின் அடுத்த பிரதமராக நியமிப்பதற்கு வேலைப்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று பேர்களின் பெயர்கள் பிரதமர் பதவிக்காக பறிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.