இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
21-வது திருத்த சட்டத்திற்கு தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
அரசியலமைப்பின் 21-வது திருத்த சட்டத்திற்கு தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaska) தெரிவித்துள்ளார்.
மல்வானை சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், 21 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருத்தம் உங்களுக்காக கொண்டுவரப்படுகின்றதா என முன்னாள் நிதி அமைச்சரிடம் ஊடகவியலாளர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியபோது,
பசில் ராஜபக்ஷ சிரித்துக் கொண்டே பலன் தரும் மரங்கள் அதிகம் கல்லால் அடிக்கப்படுவது போல், வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் அதிக தடைகளை சந்திக்க நேரிடும் என்றார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பிரதான காரணிகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று (03-06-2022) கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது பிரதான காரணிகள் சிலவற்றில் அனைத்து தரப்பினரிடையே பொது இணக்கப்பாட்டிற்கு வர முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தத்திற்கு எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது தமக்கு தெரியாது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தையும் கருத்திற் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி இதன்போது பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.