அமரர் காந்தசீலன் சண்முகநாதன்

ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்தசீலன் சண்முகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் மூன்று அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் மூன்று வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்….