போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அரச அதிகாரிகளுக்கான சுற்றறிக்கை!
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின் கையொப்பத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து அனுப்பும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் வழங்குவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து கடமை கடிதங்களுக்கும் பதில் அனுப்பும் போது சம்பந்தப்பட்ட கடிதத்தின் கையொப்பத்திற்கு கீழே பொறுப்பான பணியாளர் அதிகாரியின் நேரடி தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.