போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யுமாறு பேக்கரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரியுதுள்ளது.
இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின் விற்பனை விலை இலங்கை நாணயப் பெறுமதியில் 18 ரூபாவாக உள்ள நிலையில் அங்கிருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாய்க்கு வழங்குவது மிகவும் எளிதானது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஒரு முட்டையின் விலை 58- 65 ரூபா வரை விற்கப்படுகின்றது, எனினும் நியாயமாக விலையில் விற்காமல் விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலையில் விற்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே முட்டையை இறக்குமதி செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.