இன்று முதல் அதிகரிக்கும் தொலைபேசி கட்டணம்!
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி, லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் மற்றும் பிற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும், கட்டண தொலைக்காட்சி சேவைகளின் கட்டணத்தை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்போவதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வெட் வரியை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, விலை அதிகரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தமது நிறுவனங்களால் சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.