இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை
மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு அமுல் படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த வலயங்களில் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.