இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ4,850க்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.38,800க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
அதேபோல், 24 காரட் 99.99 தூயத் தங்கம் ஒரு கிராம் ரூ.5252 எனவும் ஒரு சவரன் ரூ.42,016 ஆக உள்ளது.
அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்து காணப்படுகிறது.
அதேவேளை வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கடந்த 3 நாள்களாக மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.60 ஆகவும், கிலோ பார் வெள்ளி ரூ.63 ஆயிரமாகவும் திகழ்கிறது.
அதேசமயம் தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 3.70 டாலர்கள் குறைந்து, 1787.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை சற்று குறைந்து 19.837 டாலராக அதிகரித்து காணப்படுகின்றது.
தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது.