உயர்தரப் பரீட்சையில் கைதிகளும் சித்தி
2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய பல கைதிகள் சித்தியடைந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து தகுதியான கைதிகளை உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய, கொழும்பு மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 கைதிகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றினர் என்றார்.
முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் சித்தி
அதில் 38 வயதுடைய கைதியொருவர் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்றும் அவர் தோற்றிய புவியியல் மற்றும் இந்து நாகரிகப் பாடத்தில் ” c ” சித்திகளையும் தமிழ் மொழியில் S சித்தியையும் பெற்றுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறினார்.
அதேபோல வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 வயதுடைய கைதியொருவர், சிங்களம், பௌத்தம் மற்றும் அரசறிவியல் பாடத்தில் S சித்திகளைப் பெற்றுள்ளதுடன் மற்றுமொரு கைதியும் உயர்தரத்தில் சித்தியடைந்துள்லதாகவும் அவர் கூறினார்.