போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இருக்கிறது” என எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ள பதாகை!
ஒரு சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இருக்கிறது” என எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ள பதாகை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இல்லை”, “டீசல் இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகளே பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது அந்தக் காலம் கொஞ்சம், கொஞ்சமாக கடந்துசென்றுக் கொண்டிருப்பதை “பெட்ரோல் இருக்கிறது” என எழுதப்பட்டுள்ள பதாகைகளின் மூலம் அவதானிக்க முடிகிறது.