நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எரிபொருள் விலைகளில் இன்று திருத்தம்!
எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மாதமொன்றுக்கு இரு தடவைகள் விலை மாற்றம்
ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார் .
அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.