48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானம்!
கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதோடு இது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வாரத்தில் எட்டப்படும் என வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு கோழிப் பண்ணையாளர்கள் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டால், கட்டுப்பாட்டு விலை அவசியமில்லை என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் மற்றும் பல நுகர்பொருட்களின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில்லறை விலை எதிர்வரும் நாட்களில் குறையும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்படி, வெள்ளை முட்டைக்கு 43 ரூபாவும், சிவப்பு/ பழுப்பு முட்டைக்கு 45 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 60 ரூபாவை விட அதிகமான விலையில் முட்டை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.