போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரத்தினம், சிவபாக்கியம்(ஆச்சிமுத்து) ஆகியோரின் அன்பு மருமகனும்,
நீலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தகுமாரி(தமிழ்நாடு), லிங்கேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற நந்தகுமாரி, சந்திரகுமாரி(பிரான்ஸ்), செந்தூர்ச்செல்வன்(ஜேர்மனி), உமாசுதன்(பிரான்ஸ்), லம்போதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகராயா, செல்லபாக்கியம், சின்னமணி இராசமணி மற்றும் சிங்காராயா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமசிவம்(தமிழ்நாடு), லிங்கேஸ்வரன்(ஜேர்மனி), சந்திரகுமார்(பிரான்ஸ்), ஜீவலங்கா(ஜேர்மனி), சத்தியா(பிரான்ஸ்), காயத்திரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகாம்பிகை, புவனேஸ்வரி, கமலாதேவி, றஜேஸ்வரி, ராஜலக்ஸ்மி, சகாதேவன், விமலாதேவி, தம்பையா, சுப்பிரமணியம், பொன்னுத்துரை ஆகியோரின் மைத்துனரும்,
கஜநிதி, காலஞ்சென்ற தயாநிதி, நிசாந்தினி, ரூபன், துசாந்தி, காதீசன், சஜீசன், துசாந், கயறூபி, சஞ்ஷியா, ஜெனிஷியா, பவிராமன், ஆதிகை, அபூர்னன், ஆதினி, ஆதிகன், அகரன், தமிழாரணி, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லைக்கா, பவிஷன், அனுசன், ஆதீசன், அனித், யசிக்கா, டினோயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கீழ்கட்டளையில் அமைந்துள்ள மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.