நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நெல் மூட்டை குடுத்து பெட்ரோல் வாங்கிய பல்கலைக்கழக மாணவி!
யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஒரு மூட்டை நெல் கொடுத்து பெட்ரோல் வாங்கி தனது தோழியின பிறந்தநாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இச்சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி தனது நண்பியின் பிறந்த தினத்திற்கு மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் நண்பர்கள் உமக்கு மட்டும் எங்கிருந்து பெட்ரோல் வந்தது என கேட்டுள்ளனர் அதற்கு
நான் ஒரு மூட்டை நெல் கொடுத்து பெட்ரோல் வாங்கினேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து பிறந்தநாள் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோலும் கொடுத்துள்ளார்.