புகையிரத சேவைகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!
கொழும்பு உட்பட பல பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகையிரத சேவைகள் இடம்பெறாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகையிரத சேவைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் புகையிரத நிலையங்களுக்கு வருகைத் தர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.