துயரச்செய்தி – திருமதி தர்மலிங்கம் தர்மபூபதி

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மபூபதி அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செல்லையா) அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பரமு இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா தர்மலிங்கம்(பங்காளர்- ஐங்கரன் ஸ்ரோர், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், கனகம்மா மற்றும் முத்தம்மா(கனடா), நாகரெத்தினம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மவாஸ், தர்மராஜ், முருகதாஸ், பிரேமதாஸ், கிரிஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தராணி, பதுமநிதி, மோகனாம்பாள், ஜீவராணி, குமாரதாசன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கபினாத், கெவின், விஜயதர்ஷன், தயாதர்ஷன், தனாதர்ஷன், தர்ஷிகா, மாதுளா, கேசிகா, ஆருஷன், வேதிகா, சாகித்தியா, பவித்திரன், அஜித்திரன், சுமித்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தம்பு, சண்முகலிங்கம் மற்றும் சரஸ்வதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், இரத்தினம், அன்னலிங்கம், மகாலிங்கம்(ராம்சேது அன்கோ, கொழும்பு), சபாரெத்தினம், கதிர்காமலிங்கம் மற்றும் கமலாம்பாள், நிர்மலானந்தராணி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பசுபதி, கனகாம்பிகை, அரியநாயகம், தம்பிராசா மற்றும் அன்னலட்சுமி, சிவசோதி, சிவபாதம், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.