நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
துயரச்செய்தி – திருமதி பவளம்மா கனகரட்ணம்
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, மன்னார் தாராபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா கனகரட்ணம் அவர்கள் 16- 09-2023 சனிக்கிழமை அன்று திருச்செந்தூர் முருகன் பொற்பாதாரவிந்தங்களில் சாந்தி அடைந்தார்.
அன்னார், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் (முன்னாள் இலங்கை இராணுவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அமிர்தகௌரி மாலன்(B.Com- Hons, ஆரம்ப தர்மகர்த்தா- திருச்செந்தூர் முருகன் ஆலயம், சமுதாய சேவை நிறுவனம், கௌரிமா அசோசியேட்ஸ்- Etobicoke), அமிர்தயோகன்(யோகன் வவுனியா, திருச்சி, இந்தியா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
காலஞ்சென்ற மாலன்கோவ்(B.Com-Hons, ஆரம்ப தர்மகர்த்தா- திருச்செந்தூர் முருகன் ஆலயம், சமுதாய சேவை நிறுவனம், கௌரிமா அசோசியேட்ஸ்- Etobicoke), காஞ்சனா(மலர்- வவுனியா, திருச்சி, இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
மயூரி, செந்தூரி, சாயித்திரி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அசோக்குமாரன்(குமரன்), கௌசிகா, பாலினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
விதுர்னியா, Noah Joseph ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், செல்லத்துரை, வேலாயுதம், சுப்பிரமணியம், பாக்கியம், ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.