துயர செய்தி – திருமதி நவரட்ணதேவி உருத்திரசீலன்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு, கொழும்பு புதுச்செட்டித்தெரு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணதேவி உருத்திரசீலன் அவர்கள் 31-01-2023 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லத்துரை பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற உருத்திரசீலன்(கொழும்பு ஐங்கரன் ஸ்ரோர்ஸ் முன்னாள் பங்காளி) அவர்களின் அன்பு மனைவியும்,உதயகுமார்(கனடா), சதீஸ்குமார்(அவுஸ்திரேலியா), செல்வகுமார்(அவுஸ்திரேலியா), ரவீணா(அவுஸ்திரேலியா) மற்றும் நவநீதா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,விமலராகினி(ராகினி- கனடா), ஜெயானி(அவுஸ்திரேலியா), நிதர்சினி(அவுஸ்திரேலியா), ஜனார்த்தன்(அவுஸ்திரேலியா) மற்றும் ஜொனார்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற தவராஜா, வரதராஜா(சுவிஸ்), மோகனதாசன்(கனடா), சுஜாதாதேவி(பிரான்ஸ்), ஜெகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வாசுகி(கனடா), தேவி(சுவிஸ்), யுஜிதா(கனடா), பாபு(பிரான்ஸ்), பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்- பரமேஸ்வரி, காலஞ்சென்ற குமரகுருபரன்- திலகமணி(கனடா), காலஞ்சென்ற இராஜகோபால்- பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற நடேஸ்வரன்- தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற குகதாஸ்- பிருந்தாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, ஹரிஸ், லுக்சிகா, சனோசன், லக்ஸரா, ரேசினி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.