துயர செய்தி!

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Clayhall ஐ வசிப்பிடமாகாவும் கொண்ட சேனாதிராஜா சசிதரன் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா கருணேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும் ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கஜந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,சர்னிகா அவர்களின் ஆருயீர் தந்தையும்,சர்வேஸ்வரன், சசிகலா, சசிரேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விக்கி, ரகு, கஜன், உதயந்தி, கஜா, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அஜந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,ரெவிந்தனா, பிறயா, ரேவிக்கா, சக்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,லக்ஷன், சதுர்ஷன், கனுஷன் ஆகியோரின் சித்தப்பாவும்,லகிஷா, கனிஷா, அபிஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.