துயர செய்தி!

யாழ். அளவெட்டி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இராஜகோபால் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்), கைலயம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(நொத்தாரிஸ்) தெய்வானைப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,இராஜகோபால் அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வனஜலோயினி, சுபத்திராவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இராஜினி, இராஜிபன்(உரிமையாளர் Group Blue Van Paris), சுபாஜினி, நிலாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுரேந்திரன், சுலோஜினி, காலஞ்சென்ற நாகேஸ்வரன்(Megaa Super Store Founder), நித்தியகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கீர்த்தனா, ஆர்த்திகா, எமிலி சோபிதா, எரிக் ருக்ஷன், டிலக்ஷா, டிலக்ஷன், நித்திலன், லஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.