துயர செய்தி!

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவானந்தம் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,செல்வபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,சதானந்தன்(சதா- சுவிஸ்), வசந்தி(கனடா), குமாரி(சுவிஸ்), குகன்(இலங்கை) சிறி(கனடா), தயா(சுவிஸ்), யோகன்(லண்டன்), ஆனந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு பாசமிகு தந்தையும்,பிறேமா, கிருஸ்ணபிள்ளை(கிட்டி), கலாரூபன்(ரூபன்), மாலினி, தர்சினி, ரதிஜா, லதா, முரளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவராசா, பரமேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற இராசாத்தி மற்றும் ஏகாம்பரம், சிவராசா, காலஞ்சென்றவர்களான துரையப்பா, கந்தையா மற்றும் தவமணிதேவி ஆகியோரின் மைத்துனரும்,சாருஜன், சஞ்சிஜா, லக்ஷிகா- அஜந், நிதர்சனா, கிரிசாந், பிரவீன், விதுஷன், மிதுனன், கபிலன், தனுஷாந், உஷாந், அபிஷாந், மதுஷாந், சியானுயா, சரண், சர்மிலன், கிஷான், கிஷாரா, நிஷான், சந்தியா, யதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.