நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பிரபல பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
பாணந்துறை கெசல்வத்தை பிரதேச பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினமிரவு (25) இடம்பெற்றதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேரத்தில் வகுப்பறைகள் மூடப்பட்டிருப்பதை கண்ணுற்ற காவலாளி இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்
விரைந்து சென்று சடலத்தை மீட்ட பொலிஸார், உயிரிழந்த நபர் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.