ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
அம்பாள் திருவருளால் பதினாறும் பெற்று வாழ வாழ்த்திய பிக்கு!

யாழில் இடம்பெற்ற இந்து திருமணத்தில் கலந்து கொண்ட பிரபல தேரர் ஒருவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில், பகிரப்பட்டு வருகின்றது.
இந்த இந்த ரதன தேரர் பௌத்த துறவியே இவ்வாறு இந்து திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிடுள்ளதாவது,
திருமண பந்தத்தில் இணையும் அன்பு நண்பர் மதிசங்கர் மற்றும் ஜெகத்பிரியா தம்பதியினருக்கு எமது வாழ்த்துக்கள் அம்பாள் திருவருளால் பதினாறு செல்வங்களுடன் சீரும் சிறப்பாக வாழ பிரார்த்திக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.
அதேவேளை சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிடும் பிக்குகளுக்கு மத்தியில் இந்த ரதன தேரரின் இந்த செயல்பாடு தொடர்பில் பலரும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளதுடன், வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்