ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வென்றுள்ளது.
அத்தோடு இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி வென்றமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.