போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்பில் சாதனை படைத்த தமிழர்கள்!
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் வீராங்கனை நந்திதா ஆகியோர் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். மற்றொரு தமிழர் அதிபன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் கடந்த மாதம் 26ம் திகதி தொடங்கி 9 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், கஜகஸ்தான் என 13 நாடுகளிலிருந்து 142 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், 92 வீரர்கள் பலப்பரீட்சை நடத்திய ஓபன் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 5 வெற்றி, 4 டிரா என தோல்வியை சந்திக்காமல் 7 புள்ளிகளை கைப்பற்றி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
மேலும் மற்றொரு தமிழக வீரர் அதிபன் 4 வெற்றி, 5 டிரா என 6.5 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கத்தை தனதாக்கினார். ஓபன் பிரிவில் முதல் 20 இடங்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இதேபோல் மகளிருக்கு நடைபெற்ற தொடரில் 50 வீராங்கனைகள் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தினர். இதில் தமிழக வீராங்கனை நந்திதா 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
ஆசிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இந்த தொடரில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் தமிழக வீரர்கள் தங்கம் வென்று தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்துள்ளனர்.