உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 9ஆம் தர மாணவன்!
2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
இந்த நிலையில், கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு, மூன்று பாடங்களிலும் B சித்திகளைப் பெற்றுள்ளார்.
அதாவது,05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தெவும் சனஹஸ் ரணசிங்க 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போது சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்துள்ளார்.
சாதாரணதர பரீட்சையில், அவர் 5 A , 2 B மற்றும் ஒரு C தேர்ச்சி பெற்றுள்ளார்.
தெவும் சனஹஸ் ரணசிங்க, சட்டத்தரணி மற்றும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே அருடைய இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.