போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த விராட் கோலி!
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பெர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்குபெற்றது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
அதேபோல் பளுதூக்குதலில் சாய்க்ஹோம் மீராபாய் சானு, ஜெரெமி லால்ரின்னுங்க, அச்சின்டா ஷெயூலி ஆகியோர் தங்கம் வென்றனர். பி.சி. சிந்து இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.
மேலும் பல வீரர், வீராங்கனைகள் பல பிரிவுகளில் பதக்கங்களை கைப்பற்றினர். இவ்வாறாக இந்தியாவுக்கு மொத்தம் 61 பதக்கங்கள் கிடைத்தன. அதில் 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் அடங்கும்.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் பங்குபெற்றவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீங்கள் நம் நாட்டிற்கு பெரும் புகழைக் கொண்டு வந்துள்ளீர்கள். எங்கள் வெற்றியாளர்கள் மற்றும் காமன்வெல்த் 2022யில் பங்கேற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஜெய்ஹிந்த்’ என தெரிவித்துள்ளார்.