இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
சிறந்த எழுத்தாளருக்கான விருதைப் பெற்ற நடிகை ரோஜாவின் மகள்!

தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.
முதல் படம் பெரிய ரீச் கொடுக்க தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, ஊட்டி போன்ற படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் செல்வமணியை காதலித்து 2002ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள், இருவரின் புகைப்படங்களையும் ரோஜா சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருப்பார்.
ரோஜாவின் மகன் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை செய்துள்ளார். அவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆக தன்னை மெருகேற்றி வருகிறார்.
இவர் எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. தற்போது தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் மகளுக்கு கிடைத்துள்ளது.