சுவிஸ் நாட்டில் விருது பெற்ற ஈழத்து தமிழன்…!

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் ” தூஸ்ரா ” குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது ( Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.
திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும் நல்லவொரு கவனிப்பைத் தரும் இந்த அங்கீகாரம், ஒரு அகதி முகம் களைவதிலும் முக்கிய பங்காற்றும் என நம்புவோமாக.
சுவிற்சர்லாந்தின் நிகழும் திரைப்பட விழாக்களில் முக்கியமான ‘சொலர்த்தூன் திரைப்படவிழா’ (solothurn film festival) வில் பங்குபற்றி. கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 21 மாலை 18.15க்கு Capitol சினிமா திரை அரங்கிலும், இன்று இரவு ஜனவரி இரவு 21.00 மணிக்கு Canva திரையரங்கிலும், என இரு தடவைகள் பொதுமக்களுக்கான காட்சிப்படுத்தல்களாகத் திரையிடப்படுகின்றன.
இவர் திரைப்படத்துறையில் மென்மேலும் பல சிகரங்களை தொட எமது வாழ்த்துக்கள். இவரை போன்று தமிழர்கள் பல துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும்