சூரியாவை வாழ்த்திய விஜய் சேதுபதி
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பார்த்து அஞ்சும் ரோலக்ஸ் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. படத்தின் இறுதியில் தான் சூர்யா சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றுவார். சில நிமிட ரோல் தான் என்றாலும் அவருக்கு தியேட்டரில் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கும்.
இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சூர்யா பற்றி விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.
“ரோலக்ஸ் ரோலில் நடிக்க முதலில் வேறு ஒருவரை தான் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். ஆனால் ஷூட்டிங் தொடங்கும் ஒரு வாரம் முன்பு தான் சூர்யா நடிக்கிறார் என என்னிடம் கூறினார்கள். தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தது.”
“இது போல வருவது நன்றாக இருக்கிறது. ஸ்டார் இமேஜை தூக்கி ஓரம் வைத்துவிட்டு ஒரு படமாக அடியன்ஸுக்காக present செய்வது பெரிய சந்தோசம்” என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.